ரீசார்ஜ் செய்யாமல் ஏப்ரல் 20-ம் தேதி வரை மொபைல் பிரீபெய்டு சேவை செயல்படும் அத்துடன் ரூ.10-க்கு இலவசமாக பேசலாம் என பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிஎஸ்என்எல் பிரீபெய்டு சிம்கார்டு ரிசார்ஜ் செய்யாமலேயே ஏப்ரல் 20-ம் தேதி வரை செயல்படும் எனவும், 10 ரூபாய்க்கு பேசுவதற்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எலும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘’கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிஎஸ்என்எல் பிரீபெய்டு சிம்கார்டு ரிசார்ஜ் செய்யாமலேயே ஏப்ரல் 20-ம் தேதி வரை செயல்படும்.

 

10 ரூபாய்க்கு பேசுவதற்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும். இதன் மூலம் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலத்தில் மக்கள் கடும் ஏழைத் தொழிலாளர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.