Unknown to me who I expected better - Tirunavukkarasar rippit

திருநாவுகரசர் என்பவரே யார் என்று எனக்கு தெரியாது என கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, அவர் அப்படி கூறியது எனக்கு நல்லது தான் என திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை யார் என்றே தமக்கு தெரியாது என தெரிவித்தார்.

மேலும் திருநாவுக்கரசர் என்று நீங்கள் யாரையோ கேட்கிறீர்கள், கிண்டல் அடித்திருந்தார்.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஹைட்ரோகார்பன் பிரச்சினையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் தான் தீர்வு ஏற்படும் எனவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான் எனவும் தெரிவித்தார்.

என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். விமர்சிக்கமாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும்? என நாசூக்காக பதிலடி கொடுத்தார்.