கொரோனாவில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்வுகளை பங்கேற்காமல் தவிர்த்து, தனது வீட்டிலேயே தேசியக்கொடி ஏற்றினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 3-4 நாட்களாக வாயுத்தொல்லை மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.