under head of edappadi palanisamy meeting tomorrow with the cabinet

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட அரிசியல் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கும் போது எதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எடப்பாடி ஒரு பக்கம் திரும்பி நிற்க, ஞானப்பழத்திற்காக முருகன் உலகத்தை சுற்றி வந்தது போல பயணத்திற்கு திட்டமிட்டுள்ளாரா் ஓ.பி.எஸ். 

எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் ஊகிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசியல் களவரம் தாறுமாறாக உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.