ராஜராஜ சோழனை இழிவு படுத்தி பேசியதாக இயக்குநர் ப.ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் கைதாக உள்ளார்.


 
சமீபத்தில் இயக்குனர் ப.ராஞ்சித் ஒரு மேடையில் பேசும்போது, ’’மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார்.

இவரின் இந்த பேச்சிற்கு பல தரப்புகளில் இருந்து விமர்சனம் எழுந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரஞ்சித்தின் இப்பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சாதி, மத, இன, மொழி தொடர்பான விரோத உணர்வை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் படிங்க..: சாதி வெறி கொட்டமடிக்கும் இயக்குநர் ப.ரஞ்சித்தின் அடிப்பொடிகள்... அருவறுக்கத்தக்க மோசமான காரியம்..!