கலவர மேகம் சூழ்ந்துள்ள டெல்லியின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது .  இதில் வடக்கு கிழக்கு டெல்லியில் ,  மாஜ்பூர் , ஜபாராபாத் ,  சீலம்பூர் ,  சாந்த் பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது . 

 கடந்த இரண்டு நாட்களாக நடந்த மோதலில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவைகளை எல்லாம் வன்முறையாளர்களால் தீவைத்து கொளுத்தினர்  வன்முறையில் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸ்கள்  மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கலவரத்தால் சாலையில் மறிக்கப்பட்டது .  சுமார் 150 பேர் கலவரத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுவரையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது .   இந்த கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக  கொந்தளித்து வருகின்றனர். 

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் ,  டெல்லியின்  நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார் .  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநாவின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது :-  ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும் .  பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் ,  இந்த கலவரம் தொடர்பாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் ,  டெல்லியின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார் .