ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக்கும் மசோதவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மாநிலங்கவையில் மசோதா நிறைவேறியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலில் மெகபூபா கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.