தமிழகத்திற்கே சாபக்கேடு! அவமான சின்னம்..! சகாயத்தை கிழி கிழியென கிழித்தெடுத்த உமா ஆனந்த்!
 
கிராமிய கலைஞருக்கு விருது வழங்கும் திருவிழா சென்னை லோயலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்து மதம் குறித்த சர்ச்சையான ஓவியங்கள் இடம்பெற்ற விவகாரத்தில் லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மன்னிப்பு கேட்டது.

இது குறித்து பேசிய உமா ஆனந்த் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். அதில் , "இந்த நிகழ்ச்சிக்கு சகாயம் வந்தாராமே...நான் உண்மை, நான் நேர்மையானவர், நான் உண்மையானவன் என மேடைகளில் பேசும் போதே தெரியும். அவர் ஒரு அய்யோக்கியர்னு.. இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், பாரத பிரதமரையும் இழிவு படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையபட்டு இருக்கிறது.

இதற்கு பின், ஒரு கும்பலே இயங்குகிறது.. இதுவே மற்ற மதத்தை இழிவு படுத்தி ஓவியங்கள் வரைந்தால் நீங்கள் சும்மா இருந்து இருப்பீர்களா..? திருமுருகன் காந்தி தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடு..ஒரு அவமான சின்னம்.. கருத்து சுதந்திரம்னா என்ன வேணும்னாலும் பண்ணுவிங்களா ?  லயோலாவில் குவிந்தவர்கள் பிரிவினைவாதத்தை சேர்ந்தவர்கள் தான்.. மோடியையும் இந்துத்துவாவையும் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதே இவர்களின் வேலையாக உள்ளது.

தப்பு செய்தவர்களை தட்டிக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா..? இது மட்டுமா.. இன்னும் என்னென்ன அயோக்கிய தனம் நடக்கிறது தெரியுமா ..? தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. எச் ராஜாவை ஏன் எல்லோரும் டார்கெட் பண்றாங்க தெரியுமா ...? அவர் உண்மையை மட்டும் தான் பேசுறார்.

பொய்யை பேசி இரண்டு தலைமுறையை சீரழித்து விட்டார்கள்..அதிலிருந்து மீட்டுக் கொண்டுவர அவர் உண்மையை மட்டுமே பேசி வருகிறார். அதனால், அவரை சில பிரிவினைவாதிகள் வேண்டும் என்றே தாக்கி வருகிறார்கள் என பதிலடி கொடுத்துள்ளார் உமா ஆனந்த்.