அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா  இந்தியா போன்ற  நாடுகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், ரஷ்யா அதன் ஹேக்கர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வக கணிகளை ஹேக் செய்து அறிவு திருட்டில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம்  ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

"பிரபுக்கள் அல்லது வசதியான கரடி என்ற பெயரில் அழைக்கப்படும் ஏபிடி29 என்ற ரஷ்ய ஹேக்கிங் குழு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கம், ராஜதந்திரம், அறிவு தளம், சுகாதரம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றை முக்கிய இலக்காக வைத்து அறிவுசார் சொத்துக்களைத் திருடுகிறது. இதில் 'வசதியான கரடி' எனும் ஹேக்கிங் குழு ரஷ்ய உளவுத்துறையுடன் கைக்கோர்த்துக் கொண்டு 2016 அமெரிக்க தேர்தலில் தலையிட்டதாக நம்பப்படுகிறது.


எனவே தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களை இவை தொடர்ந்து குறி வைக்கும். இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இந்த மதிப்பாய்வை கனேடிய தகவல் தொடர்பு பாதுகாப்பு நிறுவனம், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஆகியோரும் ஆதரிக்கின்றனர்.