உன்னைச் சந்திக்க பெரியாரின் பேரப்பிளைகள் நாங்கள் தயாராக உள்ளோம் என்று உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

திரிபுராவில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நேற்று இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரியார் சிலை உடைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பெரியார் தனி மனிதரல்ல. தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம். ஒன்றை உடைத்தால் ஆயிரமாய்... லட்சமாய் முளைத்து எழுவார்கள். உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள், நேரம், இடம் குறித்து விட்டு வா. உன்னைச் சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்.
என்று அதில் கூறியுள்ளார். 

உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயாராக உள்ளோம் என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையை மர்மநபர்கள் உடைத்துவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஸ்டாலின், கனிமொழி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! . ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!. உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா!. உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என்று உதயநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் சமீபமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கருவில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருந்த அவர் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.