திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளுக்கு பணம் கொடுக்கும் தொழில் அதிபர்கள் பைனான்சியர்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இவர்களுக்கு உதவியாக தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே ரெய்டு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் நாமக்கல்லில் சுமார் 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 

நாமக்கல் பிஸ்கே குழுமம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவன உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிரடியாக நுழைந்து. இதில் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோர் பிரபலமான நிதி நிறுவன உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் சினிமா துறையிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுஜய் ரெட்டி என்பவர் மூலமாக திமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு நிதி செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறையினர் அதிரடி மற்றும் அவரது நண்பரான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளனர். இவர்களில் சுஜய் ரெட்டி என்பவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு பைனான்ஸ் விவகாரங்களை பார்த்துக் கொள்வதும் இவர்தான் என்று பேசப்படுகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் நண்பர் வீட்டுக்கு வருமான வரித்துறை சென்று வந்துள்ளது திமுகவினரை திக் திக் மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.