Asianet News TamilAsianet News Tamil

தொண்டரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட உதயநிதி!! என்ன தகுதி இருக்கு என கேள்வி

திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் திமுக தொண்டர்கள். ஸ்டாலினின் மகனான உதயநிதிக்கும் ஸ்டாலினுக்கு கிடைக்கும் அதே முக்கியத்துவத்தை தந்து வருகின்றனர் திமுகவினர். 

Udhayanidhi  publicly apologised to DMK Carder
Author
Thanjavur, First Published Sep 7, 2018, 1:49 PM IST

கட்சியில் கூட இனி வரும் காலங்களில் உதயநிதிக்கு தான் அடுத்து அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சினிமாவில் அதிக கவனம் செலுத்தி கொண்டிருந்த உதயநிதி இனி அரசியலில் கவனம் செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

அதனாலேயோ என்னவோ அவருக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர் திமுகவினர். இதனால் சமீபத்தில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொதுக் குழு  உறுப்பினர் கூட்டத்தின் போது , அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படத்தையும் இடம் பெற செய்திருக்கின்றனர்.

Udhayanidhi  publicly apologised to DMK Carder

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டிஆர் பாலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மூத்த தலைவர் எல்.கணேசன், ஒரத்தநாடு MLA ராமச்சந்திரன், திருவையாறு MLA துரை சந்திர சேகரன், தஞ்சை இளைஞர் அணி நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பின்புறமாக ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் கலைஞரின் படம், ஸ்டாலினின் படம் அதை தொடர்ந்து உதயநிதியின் படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த கழகத்தை ஆரம்பித்த பெரியார் மற்றும் அண்ணாவின் படம் ஸ்டாம்ப் சைசில் இடம்பெற்றிருந்தது. இதனால் கடுப்பான தொண்டர் உதயநிதியிடம் காட்டமான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார். 

அந்த தொண்டன் கேட்டதிலும் தவறில்லை ஆனால் கேட்ட விதம் தான் கொஞ்சம் காட்டமாக இருக்கிறது.
”ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவெறுப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா?  முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம் பெற உங்க தகுதி என்ன?” என  அந்த தொண்டன் எழுப்பிய கேள்விக்கு பின் வருமாறு பதிலளித்திருக்கிறார் உதயநிதி.

”தவறு! மீண்டும் நடக்காது!” இது தான் உதயநிதியின் பதில். இந்த விஷயத்தில் உதயநிதியின் தவறு எதுவும் இல்லை தான். ஆனாலும் தவறை அவர் ஏற்று கொண்டு, பெருந்தன்மையாக பதிலளித்திருக்கும் விதம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios