விரைவில் முழுநேர அரசியல்வாதியாகப் போகிறார் மு.க.ஸ்டாலின் வாரிசான உதயநிதி. அதற்காக இப்போதே பல திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார். 

‘கதிரவன்’ என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கும் பணிகளில் தீவிரன்மாக இருக்கிறார் உதயநிதி. கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்காக துவங்கப்படுகிற இந்த தொலைக்காட்சியை இவருடன் கட்சிக்கார நண்பர் ஒருவரும் கூட்டு சேர்ந்து தொடங்க இருக்கிறார்கள். அடுத்து கட்சியில் முக்கிய பதவியை பெற்றுக்கொண்டு வேஷ்டி, சட்டை, துண்டு அணியவும் தயாராகிக் கொண்டிருக்கும் உதயநிதி, இனி அதிக படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.

இது ஒருபுறமிருக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் முடிந்து பல மாதங்கள் ஆகி விட்டது. ஆனால்  படத்தின் பிரமோஷன் வேலைகளை இப்போதுதான் துவங்கியிருக்கிறார். ‘பேட்ட’ படத்தை வாங்குகிற அனைவரையும் ‘கண்ணே கலைமானே’ படத்தையும் வாங்கவும் வற்புறுத்தி வருகிறாராம்.