தேர்தல் பிரச்சாரத்தின் போது மருமகனான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி தட்டில் இருந்து பொட்டுவ் வைத்து மகிழ்ந்த கனிமொழியில் புகைப்படம் வைரலாகி வருகிறது.   

தேர்தல் பிரச்சாரத்தின் போது மருமகனான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி தட்டில் இருந்து பொட்டுவ் வைத்து மகிழ்ந்த கனிமொழியில் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளரான தனது அத்தை கனிமொழிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ததை விட காரசாரமாக பேசி அசத்தி வருகிறார் உதயநிதி. காரணம் இது சொந்த அத்தை களமிறங்கும் தொகுதியாயிற்றே. அப்போது கனிமொழி உதயநிதிக்கு பொட்டு வைத்து அழகு பார்த்தது தான் இப்போதைய ஹாட் டாபிக். தங்களை மதச்சார்பின்மைவாதியாக காட்டிக் கொள்ளும் கருணாநிதி வாரிசுகள் பிரச்சாரத்தின் போது ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் பொட்டு வைத்து கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 


இப்போது கருணாநிதி குடும்பத்தினர் நாத்திகத்தில் இருந்து இப்போது மெல்ல மெல்ல ஆத்திகத்திற்கு பல்டியடிக்கத் தொடங்கியற்கு இந்தப்புகைப்படமும் ஒரு சான்று. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ரகசிய வழிபாட்டை மு.க.ஸ்டாலின் நடத்தியதாகக் கூறப்பட்டது. யானையிடம் ஆசிர்வாதம் பெறும் அவரது புகைப்படங்களும் வெளியாயின. அதே போல் அவர், வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன் சகுணம் பார்த்தே வீட்டை விட்டுக் கிளம்பினார். பின்னர் கோபாலபுரம் சென்ற அவர் கருணாநிதியின் புகைப்படத்தின் முன் அந்த பட்டியலை வைத்து வணங்கினார். தேர்தல் நெருங்கும் நிலையில் இப்போது நாங்கள் இந்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல’’ என அவர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார்.

அது ஒருபுறமிருக்க, சில தினங்களுக்கு முன்பு வரை உதயநிதி ஸ்டாலின் மீது கடுங்கோபத்தில் இருந்தாராம் கனிமொழி. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் நான்கு பக்கங்கள் கலரில் பிரசார படங்கள் தினமும் வெளிவருகின்றன. அதில் இரண்டு பக்கங்கள் முழுக்கமுழுக்க உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் படங்கள் மட்டுமே வருகின்றன. மற்ற இரண்டு பக்கங்களில் ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரசாரம் வருகின்றன.

மற்ற எந்த ஒரு தலைவரின் பிரசார படமும், வேட்பாளரின் படங்களும் வருவதே இல்லை. இதைக் கண்டு கட்சியின் மூத்த தலைவர்கள் தொடங்கி கீழ்மட்டத் தொண்டர்கள் வரை புலம்புகிறார்கள். கஷ்டப்பட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு தலைவரை வைத்து பரப்புரை செய்கிறோம், எங்களை மதிக்காவிட்டால் எப்படி என்று கொந்தளிக்கிறார்கள்.

ஆனால், இதுகுறித்து கனிமொழி, முரசொலியில் நமது வேட்பாளர்கள் செய்யும் பிரசார படங்கள் எல்லாமே வரவேண்டும் என்று ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு ஸ்டாலினோ, ’’முரசொலியில் உதயநிதிதான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதனால் அவர் படத்தைப் போடுவதில் என்ன தப்பு’ என்று கேட்டுள்ளார். இதனால், உதயநிதி மீது கோபத்தில் இருந்த கனிமொழி அந்த வெறுப்பை மறந்து மருமகனுக்கு பொட்டு வைத்து அழகு பார்த்து பூரித்து போயுள்ளார்.