மகன் உதயநிதி மீது மாளாத கோபத்தில் இருக்கிறார் அப்பா ஸ்டாலின்! தன் முதல்வர் கனவுக்கு உதய்யே சங்கு ஊதி எழுப்பிவிடுவார் போல, என்று தலையிலடிக்கிறார் தளபதி! என்று பரபரக்கிறார்கள் தி.மு.க. தலைகள். அறிவாலயத்தில் அமளிதுமளிப்படும் விவகாரம் லேட்டஸ்ட் விவகாரம் இதுதான்.

என்ன பிரச்னை?... எடப்பாடியின் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது அடுத்து தேர்தல் வந்தாலோ...எப்படியாவது முதல்வராகியே தீருவது என வெறித்தனமான முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். சர்வேக்களும் அவருக்கு ஆதரவான சூழலை சொல்கின்றன. ஆனால் தன் முயற்சிக்கு, தன் குடும்ப வட்டாரத்தில் உள்ள சிலரே கடும் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பது அவரது வருத்தம். அது யாரென்றால்...அண்ணன் அழகிரியும் அவரது வாரிசுகளும் மட்டுமல்ல. தன் அப்பா கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறனனின் மூத்த மகன் கலாநிதி மாறனும், இதில் முதலிடத்தில் இருப்பதாக ஸ்டாலினின் மனம் வேகிறது. 

கலாநிதி மாறன் தன் சொந்த பட நிறுவனமான சன் பிக்சர்ஸ் மூலம் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த தீபாவளிக்கு வெளியாகி, அரசியல் அரங்கை சதாய்த்து எடுத்த ‘சர்கார்’ இவரது தயாரிப்புதான். இந்த படத்துக்கான ஆடியோ விழாவில் நாயகன் விஜய் பேசிய ‘நான் முதல்வரானால்’ பேச்சு, தி.மு.க.வை பெரிதாய் அதிர வைத்தது. முதல்வர் கனவில் ஸ்டாலின் இருப்பது தெரிந்தும் கூட கலாநிதி இப்படியொரு படத்தை தயாரித்து, அதன் விழாவில் விஜய் இப்படி பேச மேடை போட்டுக் கொடுத்ததை எண்ணி வயிறெரிந்து சபித்தனர். 

ஆக்சுவலி அந்தப் படம் தாரை தப்பட்டை முழங்க கிழித்தது என்னவோ ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை தான். ஆனாலும் விஜய்யின் அரசியல் ஆசையை கிளற வைத்தது அந்தப் படம். அவருக்கு இருக்கும் ரசிக பலத்தை அறியவும் வைத்தது. இது ஸ்டாலினுக்கு பெரும் கடுப்பையும், சவாலையும் தந்திருக்கிறது. இதற்கடுத்து, ஸ்டாலினோடு நேருக்கு நேர் மோதலுடன் அரசியல் களத்துக்கு வரும் ரஜினிகாந்தை வைத்து ‘பேட்ட’ படத்தை தயாரித்திருக்கிறார் கலாநிதி. இந்தப் படத்தில் அரசியல் இல்லைதான். ஆனால், ரஜினியை மீண்டும்  இளமையாகவும், ஸ்பீடாகவும் பிம்பப்படுத்தி அவருக்கு இருந்த மாஸை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது இந்தப் படம். 

’ஆன்மிக அரசியல்’ எனும் டைட்டிலுடன், திராவிடத்துக்கு எதிரான அரசியல் செய்ய வரும் ரஜினி தனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில், கலாநிதி செய்திருப்பது தன்னை வெகுவாய் பாதிப்பதாக ஸ்டாலின் புலம்பியிருக்கிறார். ஆனால் இவரையெல்லாம் கூட ‘என்ன இருந்தாலும் அடுத்த வீட்டு ஆள்’ என்று சொல்லி ஜீரணித்துக் கொண்ட ஸ்டாலினால், தன் சொந்த ரத்தமான தன் மகனே தனக்கு ஆப்படிக்கும் வேலையில் இறங்கியிருப்பதை தான் பொறுக்க முடியவில்லை. 

அதாவது ரஜினியை வைத்து செம்ம மாஸாக கலாநிதி தயாரித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிஸ்ட்ரிபியூஸன் உரிமையில் பெரும் பங்கை உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தான் பெற்று, வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் ரஜினி மாஸை பல மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் விஷயத்தில் உதயநிதியின் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது, மெயின் டிஸ்ட்ரிபியூட்டராக. இந்தப் படத்தில் வரும் ’இளமை திரும்புதே’ பாடல் போல், நிஜத்திலும் ரஜினிக்கு இளமை திரும்பிடுச்சு என்றே அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் கூத்தாடுகிறார்கள். இது, அரசியலுக்குள் நுழையும் ரஜினிக்கு பெரிய கிஃப்ட் ஆக அமைந்திருக்கிறது. இந்த சூழலில்தான் ஸ்டாலினுக்கு, உதயநிதி மீது கடும் வருத்தம்! என்று சொல்லும் தி.மு.க. முக்கிய புள்ளிகள் அதற்கான விளக்கமாக...

”ரஜினி படத்தின் பிஸ்னஸில் உதயநிதி இறங்குவது தளபதிக்கு முதல்ல தெரியாது. மிக மிக சமீபத்தில்தான், அதுவும் பத்திரிக்கை செய்திகள் மூலமா தெரிஞ்சுகிட்டார். அவர் இதை துர்காவிடம் சொல்ல, அண்ணி உதய்யை கூப்பிட்டு, ‘ஏன் பா இந்த மாதிரி? ஏற்கனவே பெரியவர் (கலாநிதி) தயாரிச்ச படத்துல நடிச்ச உன் ப்ரெண்டு (விஜய்) பேசுன அரசியல் பேச்சும், அதுக்கு பின்னாடி வந்த பிரச்னைகளும் உனக்கு தெரியும். இப்பவும் அப்பாவுக்கு போட்டியாளரை வெச்சு படம் தயாரிக்குது அந்த கம்பெனி. ரஜினியோ, அப்பாவுக்கு நேரடி போட்டியா இருக்கார். 

இதெல்லாம் தெரிஞ்சும் கூட நீ இந்த பிஸ்னஸ்ல இறங்கணுமா? உனக்கே இதெல்லாம் புரியாதா? நல்லா இருக்குதா! அப்பா கஷ்டப்படுறார்.” அப்படிங்கிற மாதிரி பேச, உதய்யோ ‘பிஸ்னஸ் வேற, பர்ஷனல் வேறங்கம்மா. உங்களுக்கு இது புரியாது.’ன்னுட்டாராம். உதய்யின் மனைவியும் இதுல அவருக்கே சப்போர்ட்டாம். மறுபடியும் தளபதியோட கவனத்துக்கு இந்த விஷயம் போக, ‘கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கு என் பையில இருந்து காசு வேணும். வளர்ந்து பெரிய பிஸ்னஸ் மேன் ஆன பிறகு என் கண்ணையே குத்துவாரு இல்லையா? என்னோட சி.எம். ஆசைக்கு இவனே உலை வைப்பான் போல!’ என்று புலம்பிவிட்டார். ஹால்ல உட்கார்ந்து இதையெல்லாம் கவனிச்ச எங்களால் சங்கடத்தில் நெளிய முடிஞ்சதே தவிர எதுவும் பேச முடியலை. கட்சியை விட கரன்ஸி முக்கியமா போச்சுதான் உதய்க்கு?” என்கிறார்கள். இப்டி பண்றீங்களே உதய்!