Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் விட்டதை உதயநிதி மீட்பாரா..? திடீரென இந்துக்களுக்கு ஆதரவா உதயநிதி போட்ட அதிரடி ட்வீட்..!

இட ஒதுக்கீட்டின் மூலம் இந்துக்களுக்கான உரிமையை உறுதி செய்வதும் அறநிலையத் துறை மூலம் ஆலயங்களுக்கு குடமுழுக்கு நடத்தி, அவற்றின் சொத்துக்களை பாதுகாத்ததும் திமு கழகமே. இன்றைய சூழலில் இந்துக்களின் உண்மையான எதிரிகள் யார் என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்" என தெரிவித்துள்ளார்.

udayanidhi stalin tweeted about hindu religion  and temple
Author
Chennai, First Published Jan 2, 2020, 7:02 PM IST

ஸ்டாலின் விட்டதை உதயநிதி மீட்பாரா..? திடீரென இந்துக்களுக்கு ஆதரவா உதயநிதி போட்ட அதிரடி ட்வீட்..! 

இந்துக்களுக்கு விரோதமாக திமுக நடந்துகொள்கிறது என பாஜக, அதிமுக, இந்து மக்கள் கட்சி என பல கட்சிகளின் முக்கிய  புள்ளிகள் தொடர் குற்றசாட்டை முன் வைத்து வந்தனர்.இதற்கு முன்னதாக திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரம் குறித்து விமர்சனத்தை முன் வைத்து இருந்தார் ஸ்டாலின். சந்தர்ப்ப சூழ்நிலையில் நெற்றியில் வைக்கும் குங்குமத்தையம் உடனே அழித்து விடுவார் ஸ்டாலின்.. இதெல்லாம் போதாது என எப்போதும் திமுக விற்கு ஆதரவாக   இருக்கும் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியது எல்லாம் நாம் அறிந்ததே....

மேலும் எந்த ஒரு இந்து பண்டிகையாக இருந்தாலும், உதாரணத்திற்கு தீபாவளி பண்டிகை,  கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி என எந்த பண்டிகையாக இருந்தாலும் திமுக தலைவர் வாழ்த்து தெரிவிப்பதும் இல்லை என்ற பேச்சு அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகும்.

இந்த நிலையில் இதை எல்லாம் உடைக்கும் பொருட்டு  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திடீரென இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு ட்வீட் செய்து, வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் "திமுக தான் இந்துக்களுக்கான கட்சி" எனவும் பேசப்பட்டு உள்ளது. 

அதில், "இட ஒதுக்கீட்டின் மூலம் இந்துக்களுக்கான உரிமையை உறுதி செய்வதும் அறநிலையத் துறை மூலம் ஆலயங்களுக்கு குடமுழுக்கு நடத்தி, அவற்றின் சொத்துக்களை பாதுகாத்ததும் திமு கழகமே. இன்றைய சூழலில் இந்துக்களின் உண்மையான எதிரிகள் யார் என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள சமுக வலைத்தள வாசிகள், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி விடுமுறை தினமாகவும், கிறிஸ்துமஸ் ரம்ஜான் பெருமாள் வாழ்த்து தினமாகவும் இருக்கும் போதே வெளிப்படையாக மக்களுக்கு தெரியும். 13 சதவீத சிறுபான்மை வாக்குக்காக நீங்க செய்கிற மத அரசியலுக்கு ஆன்மீக அரசியல் முற்றுப்புள்ளி வைக்கும். இன்று போல் திமுக என்றும் வாழும்" எனவும் தெரிவித்து உள்ளார்.

மற்ற சிலரும் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத வாங்க கோயில் கோவில் சொத்தை பாதுகாப்பாங்களாம் நம்பற மாதிரியா இருக்கு? திருமணத்தின்போது சொல்லும் மந்திரங்கள் மோசமானது என பேசியது திமுக. நீங்க இதெல்லாம் பேசினால் நம்ப முடியுமா? என கேள்வி எழுப்புகின்றனர்.

இதேபோன்று பல்வேறு தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பக்கம் ஒருசில கருத்துக்களை கூறி விமர்சனத்திற்கு உள்ளானாலும், அதனை  எல்லாம் உடைத்தெறியும் பொருட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்த புது யுக்தியை கையாண்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios