நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என அயராது உழைத்து வருகிறது திமுக. ஆளுக்கொரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் என்ன..? ஒரு பக்கம் தேர்தல் அறிக்கை என்ன..? என காலில் பம்பரம் கட்டிக்கொண்டு சுழல்வது போல.. ஒரே ஓட்டம் தான்.

இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருவாரூரில் தனது பிரச்சார உரையை தொடங்கி வைத்தார். கனிமொழியோ நேற்றே அவரது தொகுதியான தூத்துக்குடியில் பிரச்சார உரையை நிகழ்த்தி பட்டாசு கிளப்பினார்.

இதற்கிடையில் இன்று, உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக ஆதரவு குரல் கொடுக்க, தென்சென்னை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்துவைத்து, சைதாப்பேட்டையில் பிரச்சார பரப்புரை நிகழ்த்தினார் 


 
அப்போது, "அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்" இவருடைய வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது என்றார். அதன் பின்னர் உதயநிதி கொடுத்த விளக்கம் தான் இது .. "அக்கா தமிழச்சி.. என்னை எப்போதும் பாசமாக தம்பி என்றே அழைப்பார். இன்றல்ல நேற்றல்ல மூன்று தலைமுறைகளாகவே தொடரும் பாசம் அது. கருணாநிதி மீதும் எங்கள் குடும்பத்தாரின் மீதும் அதிக நட்பு கொண்டவர்.. அந்த நட்பே அவருக்கு வெற்றி பெற்று தரும்...தென் சென்னை மக்கள் அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்...

நான் அழகு என சொன்னது.. புறத்தோற்றத்தை அல்ல.. அவரின் அழகிய தமிழ், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரது கொள்கை, திமுக கொள்கையில் கொண்ட நாட்டம்.. இதை தான் சொன்னேன் என கூறினார்.

அழகுக்கு உவமை கொடுத்து அற்புதமான விளக்கத்தை கொடுத்த உதயநிதியின் பேச்சை கேட்டு தொண்டர்கள் எழுப்பிய கரகோஷத்தில் மேடையே அதிர்ந்துள்ளது என்றால் பாருங்களேன்..!