சசிகலா, முதல்வர் எடப்பாடி தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரன், முதல்வராக துடிக்கும் ஸ்டாலின் அவர்களின் மகன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக பல்வேறு இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று கல்லக்குடியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் டுவிட்டர் பதிவில்;- சசிகலா அவர்கள் குறித்து  உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு  மிகவும் ஆபாசமானது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒரு  பெண்மணியை கேவலமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது  உரிய நடவடிக்கை எடுத்து, தண்டனையை பெற்று தர வேண்டியது தமிழக அரசின் கடமை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரன், முதல்வராக துடிக்கும் ஸ்டாலின் அவர்களின் மகன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இப்படி பேசியிருப்பது தமிழத்திற்கே மிக பெரும் அவமானம். தி மு கவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள்  இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். மு க ஸ்டாலின் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தி மு க கூட்டணி கட்சியினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.