தொண்டர்களே.. உங்களுக்கு இதுதான் கடைசி வார்னிங் ...! அறிக்கை விட்டு தெறிக்க விட்ட உதயநிதி.. திமுகவில் திருப்புமுனை..! 

பேனர் வைக்க தடை, முரசொலி அலுவலகம் பஞ்சமி நில பிரச்சனை, திமுக தலைவர் ஸ்டாலினை சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்து பதிவு செய்வது என பரபரப்பாக இருக்கும் இந்த 

மதவெறி கூட்டத்திற்கு தமிழ் மண்ணில் அறவே இடமில்லை என்பது நாம் அறிந்ததே. இது அந்த கூட்டத்துக்கும் தெரியும். ஆனால் நம் பெருமித அடையாளங்கள் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை திரித்து பிரச்சாரம் செய்வதன் மூலம் இங்கு தங்களுக்கு செல்வாக்கு இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இதற்கு மாநிலத்தில் ஆளும் கையாலாகாத அடிமை அரசும் துணை போவதுதான் வேதனை.

இந்த சூழலில் பொய் பிரச்சாரம் செய்யும் மதவெறி கும்பலுக்கு நாமும் தீனி போட்டு விடக்கூடாது என்பதே என் வேண்டுகோள்; சில தொலைக்காட்சிகளில் திமுக சம்பந்தப்பட்ட சுவரொட்டிகளில் மூத்த தலைவர்களின் புகைப்படங்களை விட உதயநிதியின் புகைப்படமே பிரதான இடம் பிடிக்கிறது. இதற்கு யார் காரணம் என்று பரபரப்பாக விவாதிக்கிறார்கள். இது போன்ற செய்திகள் இந்த ஆட்சிகளின் அவலத்தை திசைதிருப்ப நடக்கும் வேலையே தவிர இதில் ஆக்கபூர்வமான அறிவு புகட்டும் பணி துளியும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். இருந்தாலும் நாமும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது அவசியம். இது உங்களுக்கு நான் ஏற்கனவே சொன்னது தான் இருந்தாலும் உறுதியாகவும் இறுதியாகவும் மீண்டும் நினைவு படுத்துகிறேன்; இனி நான் சம்பந்தப்படாத கலந்துகொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளில் அறிவிப்புகளிலோ  சுவரொட்டிகளிலோ அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தை கழகத்தினர் யாரும் பயன்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் கழக தலைவர் போன்ற நம் முன்னோர்களின் புகைப் படங்கள் தான் இடம்பெறவேண்டும் இதேபோல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பவர் ஒரே ஒருவர் தான்; அப்படி ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைக்கு நிகராக வேறு ஒருவரை நம்மால் காட்ட முடியுமா? உண்மை இப்படி இருக்கையில் என் பெயருக்கு முன்னால் மூன்றாம் கலைஞர் திராவிடர் கலைஞர்;திராவிட தளபதி; இளம் தலைவர் போன்ற பட்டப் பெயர்கள்.. இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. இப்படி பெபயிரிட்டு விளிப்பதால் நாளையிலிருந்து நான் என்ன கலைஞர் ஆகிவிடப்போகிறேனா? கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே; நம் தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே

இனி இதுபோன்ற தர்மசங்கடங்களுக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். நான் உங்களில் ஒருவனாக உங்களின் மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன்; அதனால் தயவு செய்து பெயர்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதேபோல நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதும் நிறுத்த வேண்டும். என் வருகையை உங்களுக்கு உணர்த்தும் வகையில் செலவு செய்தே ஆகவேண்டும் என நீங்கள் நினைத்தால் பட்டாசு வாங்கும் பணத்தை என் முன்னிலையில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கொடுத்து உதவுங்கள். அதுவே நம் மனதுக்கு நிறைவான கொண்டாட்டமாக அமையும் .மேலும் கழக கொடி கட்டு வதை கூட காவல்துறையின் அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஏற்கனவே பேனர் வேண்டாம்னு சொல்லிட்டீங்க... இப்ப பட்டாசு கூடாது என்கிறீர்களே...  பட்டப் பெயரையும் தவிர்க்க சொல்றீங்க... கூடுதலா போட்டோவே வேண்டாம் என்கிறீர்கள்... நீங்க வருவதை அப்புறம் நாங்கள் இப்படித்தான் கொண்டாடுகிறது என்று உரிமையுடன் கேள்வி எழுப்பும் குரலை என்னால் கேட்க முடிகிறது. உங்களைப் பற்றி நானும் என்னைப் பற்றி நீங்கள்  புரிந்துகொள்ள இந்த பட்டாசு பட்டம் புகைப்படம் போன்றவை தேவையா என்ன..? 

பொய்களின் இரைச்சல் அதிகரித்துள்ள இந்த விஷச் சூழலில் சமூக நீதியை, இனத்தை பண்பாட்டை மொழியை காக்க வேண்டிய இடத்தில் உள்ள நாம் இதுபோன்ற தேவையற்ற விளம்பரங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான கடமை ஆற்றுவோம் - உதயநிதி