திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கினார். ஆனாலும், உதயநிதி  ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை.

பாஜக வெற்றிவேல் யாத்திரை நிவர் புயல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் யாத்திரை மீண்டும் வருகிற 3ம் தேதி இல்லது 4ம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் நிறைவு பெறும்.  பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனைத்து தரப்பினரிடமும் குறிப்பாக முருகன் பக்தர்கள் இடையே நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது. 

மேலும், நிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால், தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் தொகுதி பங்கீடு என்பது டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.