திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தில்,சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது தலை காண்பித்து வருவது அனைவரும் அறிந்ததே.. அதை பற்றி பல விமர்சனம் எழுந்தாலும், மக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு தனி இடம் உதயமாகி வருகிறது 

திண்டுக்கல் மற்றும் ஆண்டிப்பட்டி கிராம சபா கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி மக்களை நேராக சந்தித்து அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்து மனுவை பெற்று வந்தார்

இதுதவிர, பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் இளைஞர் எழுச்சி நாள் முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். இந்த அனைத்து நிகழ்ச்சியின் போதும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவையில் திமுக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் அமைத்துள்ள நூலகத்தை நேற்று முன்தினம் உதயநிதி திறந்து வைத்தார். அந்த நூலகத்தில் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின்,பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் உதயநிதியின் போட்டோவும் இடம் பெற்று இருந்தது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை பார்த்த சமூக வலைத்தளவாசி ஒருவர் எழுப்பிய கேள்வியும் அதற்கு உதயநிதி கொடுத்துள்ள பதிலும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

சமூகவலைத்தள வாசி எழுப்பிய கேள்வி இதுதான்.. 

 

''எந்த பொறுப்பில் இருக்கார்னு அவர் புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் வச்சிருக்கீங்க. என ஒருவர் பதிவிட, அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதியோ, "நேற்றே என்னுடைய படம் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது" என கூலாக பதில் கூறி உள்ளார்.

உதயநிதியின் பதிவை எதிர்பாராத அந்த அந்த நபர் சரியான பல்ப் வாங்கியுள்ளார் என விமர்சனம் கிளம்பி உள்ளது. மேலும் உதயநிதியின் இந்த பதிலுக்கு, தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.