திமுக இளைஞரணி செயலாளாராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளாராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர்.

திருச்சி, நாமக்கல் மாவட்ட திமுகவினர் இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.