அதிரடி  அரசியல் செய்து வந்த மு.க.அழகிரி அமைதியாகிக் கிடக்கிறார். ஆனாலும், அவரது கண் இப்போது வரை முரசொலி அலுவலகத்தை நோக்கியே இருக்கிறது. 

 காரணம் 10 ஆயிரம் கோடி ரூபாய் அறக்கட்டளை சொத்துக்கள். அந்தப்பணம் எல்லாம் முறையற்ற வகையில் செலவு செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் பலவகைகளில் வரக் கூடிய பணத்தை முரசொலி அறக்கட்டளை வரவில் வைத்துக்கொண்டனர். இப்போது 10 ஆயிர கோடி பணம்  மட்டுமே இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக இருக்கிறது. இப்போது முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக, மேனேஜிங் டைரக்டராக  இருக்கும் உதயநிதி இந்தப் பணத்தை கையாண்டு வருகிறார். அவர் படமெடுப்பதெல்லாம் இந்தப்பணத்தில் இருந்து தான்.

 

இந்த அறக்கட்டளை நிர்வாகத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வட்டிக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொண்டால் இந்தக் கணக்குகளை கேட்பார் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் முதல்கட்டமாக கழகத்தில் தனக்கு பொருளாளர் பதவியை கேட்டு வந்தார் அழகிரி. தனக்கு கட்சியில் பொறுப்பு வேண்டாம். முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால்போதும் எனக் கேட்டு வந்தார் மு.க.அழகிரி.

ஏற்கெனவே முரசொலி அறக்கட்டளை உறுப்பினர்களாக கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். தயாளு அம்மாள், கனிமொழி, கலாநிதி, தயாநிதி, உதயநிதி, மு.க.தமிழரசு, அழகிரி, க்ருத்திகா உதயநிதி, அனுஷா தயாநிதி ஆகியோர் 2008 முதல் 2011ம் ஆண்டு வரை இருந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு அறக்கட்டளையில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு, கலாநிதி, தயாநிதி, மு.க.தமிழரசு, அனுஷா உதயநிதி, தயாளு அம்மாள் ஆகியோர் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆகையால், மு.க.அழகிரிக்கு முரசொலி அறக்கட்டளை விவரங்கள் அனைத்தும் அழகிரிக்கு அத்துபடி. உதயநிதி, முரசொலி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு வந்தவுடன் கருணாநிதி குடும்பத்தையும் தாண்டி எ.வ.வேலு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 

அழகிரி கட்சியில் இல்லாவிட்டாலும், அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் சில விசுவாசிகள் முரசொலி அறக்கட்டளையில் நடப்பதை அழகிரியிடம் ரகசியமாக பகிர்ந்து வந்தனர். இந்தக் கணக்கு வழக்குகளை எல்லாம் விரைவில் பொதுவெளிக்கு கொண்டு வந்து அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டுட்டு இருந்தார் அழகிரி. ஆனால் சந்தர்ப்பம் வாய்க்காததால் இதிலும் அமைதியாகி விட்டார்.

 

இப்போது முரசொலி இடம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, மு.க.அழகிரி ஆதரவாளர்கள், ‘’அண்ணனை கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும், இறுதி வரை தனது மகன் தயாநிதி அழகிரியை முரசொலி அறக்கட்டளையிலாவது சேர்த்துக் கொள்ளச் சொல்லி கேட்டார். ஆனால், மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. அண்ணனின் சாபம் தான் இப்போது நோட்டீஸ் அனுப்பும் வரை நடந்து வருகிறது’’என்கிறார்.