ஜோசியக்காரர் வாக்குப்படியே உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில இளைரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளது. தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதிக்கு கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளா் பொறுப்பு வழங்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளா்கள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனா். 

ஆனால், உதயநிதி ஸ்டாலின் இன்னும் பக்குவப்பட வேண்டும். அவருக்கு பொறுப்பு வழங்கினால் அது கட்சிக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தலாம் என்று சில மூத்த உறுப்பினா்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் உதயநிதிக்கு பொறுப்பு வழங்கும் பணியை ஸ்டாலின் சற்று பரிசீலனையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இதனிடையே, அதிமுக ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க பலவழிகளிலும் முயன்று வந்தார் மு.க.ஸ்டாலின். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பதவியை பிடிக்க முயற்சித்ததும் தோல்வி அடைந்தது. அடுத்து 22 சடமன்ற இடைத்தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற ஸ்டாலினின் திட்டமும் பலிக்கவில்லை. அடுத்து அதிமுக எம்.எல்.ஏக்களை இழுத்து வந்து ஆட்சியை பிடிக்க முயன்றதும் பலிக்கவில்லை. 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதிமுக ஆட்சி கவிழும். அடுத்து ஆட்சியை பிடித்து விடலாம் என கணக்குப்போட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் அந்த வழக்கை தேதி குறிக்காமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். இதனிடையே உதயநிதியின் சாகதகத்தை அவரது தாயார் தனது ஆஸ்தான ஜோதிரடிடம் காட்டி பார்த்திருக்கிறார். அப்போது கணித்த ஜோசியக்காரர், ‘ உதயநிதி நேரடி அரசியலுக்கு வந்தால் மட்டுமே மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியை பிடிக்கமுடியும் ‘ எனக் கூறியிருக்கிறார். 

அதனை துர்கா, ஸ்டாலினிடம் வலியுறுத்த அரைகுறை மனதாக இருந்த மு.க.ஸ்டாலின் உடனடியாக உதயநிதியை முழுமனதுடன் இளைஞரணி செயலாளராக்கியதாக கூறப்படுகிறது.