அதிமுகவின் ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் எனவும் அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் பா.ஜ.கவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் பன்னீர் ஆதரவாளர் எம்.எல்.ஏ நடராஜ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுவில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வந்ததால் அக்கட்சியின் பிரதான சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதைதொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க ஒ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதில் ஏதும் பிடிபடவில்லை. எனவே அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே இரட்டை இலைகளை மீட்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியது.

இதனால் இரு அணிகளும் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு ஒ.பி.எஸ் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அதில் சசிகலா தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக வைக்கப்பட்டது. 

ஒ.பி.எஸ் தரப்பின் இந்த நிபந்தனைக்கு இ.பி.எஸ் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே நாளை பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில், ஒ.பி.எஸ் அணியின் ஆதரவாளரான மயிலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,  அதிமுகவின் ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் எனவும் அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் பா.ஜ.கவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே நல்லாட்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்.