TWO LEAVES LOGO BELONGS TO OPS EPS TEAM
இரட்டை இலை சின்னம் இபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பிரமாண பத்திரங்கள்,எம்எல்ஏக்கள்,எம்பிக்களின் ஆதரவுகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு,தினகரன் அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் இடையே இரட்டை இலை சின்னம் பெறுவதில் கடும் போட்டி நிலவி வந்ததால்,கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்
பின்னர் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.நீண்ட நாட்களாக நடந்து வந்த பெரும் இழுப்பறிக்குபின், இன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு என ஒரு முடிவுக்கு வந்தது
டிடிவி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு,OPS EPS அணியின் கோரிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சட்டப்படி சொந்தம் என தொடர்ந்து சொல்லி வந்த தினகரன் அணி ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை இலை சின்னம் இபிஎஸ்- ஒபிஎஸ் க்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதற்கு தினகரன் தரப்புலிருந்து மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
கட்சிக்கொடி,அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை இபிஎஸ்-ஒபிஎஸ் அணி இனி பயன்படுத்த எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதிலிருந்து அதிமுக என்ற கட்சி அதிகாரபூர்வமாக எடப்பாடிக்கே சொந்தமானது....
