two leaves case ttv dinakaran

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க நான்கு மாத அவகாசம் கோரிய டிடிவி தினகரன் வழக்கின் தீர்ப்பு இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக‌ பிரிந்தது. அதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என பிரச்சனை எழுந்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்தது. முடிவில் கட்சி சின்னம் மற்றும் கட்சியின் பெயரை பயன்படுத்த இரு அணிகளுக்கும் இடைக்கால தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இரட்டை இலை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு அளித்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை நான்கு மாத கால அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பினர் சென்நீனை உயர்திநீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவின் மீதான தீர்ப்பினை இன்று மதியம் நீதிபதி வேணுகோபால், அப்துல் குத்துஸ் ஆகியோர் தெரிவிக்க உள்ளனர்.