ஸ்டாலினின் நெருங்கிய முகங்கள் அடுத்தடுத்து கைது..! கலக்கத்தில் அறிவாலயம்... பயங்காட்டுகிறதா பாரதிய ஜனதா..?
கடந்த சில நாட்களாக பா.ஜ.க.வின் இளைஞரணியினர் இப்படித்தான் இணையத்தில் தி.மு.க.வுக்கு பீதியோடு, பேதியையும் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை துவக்கத்தில் ‘ஏய் அந்தப்பக்கம் போய் வெளாடுங்கப்பா, சின்னப்பசங்களா’ எனும் ரீதியில் காமெடியாய் டீல் செய்தது தி.மு.க. தரப்பு.
கடந்த சில நாட்களாக பா.ஜ.க.வின் இளைஞரணியினர் இப்படித்தான் இணையத்தில் தி.மு.க.வுக்கு பீதியோடு, பேதியையும் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை துவக்கத்தில் ‘ஏய் அந்தப்பக்கம் போய் வெளாடுங்கப்பா, சின்னப்பசங்களா’ எனும் ரீதியில் காமெடியாய் டீல் செய்தது தி.மு.க. தரப்பு.
ஆனால் அடுத்தடுத்து நடந்திருக்கும் இரண்டு கைதுகளோ, ஒட்டுமொத்த தி.மு.க.வையும் சற்றே மிரளத்தான் வைத்துள்ளன. காரணம், இப்படி கைதாகியிருக்கும் இருவருமே ஸ்டாலினுக்கு மிக வேண்டிய வட்டத்தினுள் இருந்த மனிதர்கள். அதிலும் நேரடி அரசியலில் பெரிதாய் தலைகாட்டாமல், உள் வட்டத்தில் இருந்து கொண்டு ஸ்டாலினுக்கு பெரிதாய் சப்போர்ட் செய்தவர்களாம்.
இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான் “திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் ராஜ் மோகன் குமார். இவரை கட்சியிலிருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்திருக்கிறது தலைமை. காரணம், கியூ பிராஞ்ச் போலீஸாரால் இவர் கைது செய்யப்பட்டதுதான். அதாவது போலி ஆவணங்களை வைத்து முறைகேடான வழிகளில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு நபர்களை அனுப்பி வைத்ததுதான் குற்றச்சாட்டு. இலங்கையை சேர்ந்த பிரேம் எனும் நபரை இப்படி மோசடி பாஸ்போர்ட்டில் தன்னுடன் கனடாவுக்கு கூட்டி செல்ல முயற்சிக்கையில்தான் ராஜ் மோகன்குமார் அவரது பெண் உதவியாளருடன் கைது செய்யப்பட்டார்.
இதுவரையில் ஏழு நபர்களை இப்படி சட்டப்புறம்பாக அவர் அனுப்பியுள்ளாராம். அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார் என்றும் கியூ பிராஞ்சுக்கு தகவல் கிடைத்து விசாரித்து வருகின்றனர். இந்த நபர், ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளுடன் இருக்கும் போட்டோக்களும் கியூ பிராஞ்சின் பார்வைக்கு சென்றுள்ளன. ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு ஆகியோரின் அருகில் ராஜ் மோகன்குமார் நிற்கும் போட்டோக்களும் அதில் இருப்பதால் ஓவராய் துளைத்து எடுத்து விசாரிக்கிறது போலீஸ்.
தி.மு.க.வின் முக்கிய நபர்களின் வாரிசு மற்றும் முக்கிய சொந்தங்கள் இந்த நபர் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று வந்த தகவலும் இப்போது வெளியாகி, தி.மு.க. தலைமைக்கு புது தலைவலியை கொடுத்துள்ளதாக தகவல். இந்த கைது ஒரு புறம் கிறுகிறுக்க வைக்க, சென்னையில் நடந்திருக்கும் கைதும் தி.மு.க. தலைமையை எரிச்சலூட்டி இருக்கிறது.
கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் வரும்போதெல்லாம் அவரின் காரைப் பின் தொடர்ந்து அணிவகுப்பதற்கு எண்ணற்ற கார்களை ஏற்பாடு செய்து கொடுத்தவர் முத்துவேல். இவர் இப்போது பணமோசடிப் புகாரில் கம்பி எண்ணுகிறார். போயஸ் கார்டன் பகுதியில் ஃபைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்துபவர் இவர். உடம்பில் நகைகளை தொங்கவிட்டுக் கொண்டு நகரும் நகைக்கடை போல் சுற்றியவர். பல சொகுசு கார்களில் வலம் வந்த இவர், சேகர் பாபுவுக்கு மிக நெருக்கமாம். இப்போது மோசடி புகாரில் உள்ளே சென்றிருக்கிறார்.
இந்த இரு கைதுகளும் ஸ்டாலினை அப்செட்டாக்கியுள்ளன. காரணம், தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் வலம் வந்த இந்த நபர்களின் தவறுகளை வைத்து, தனக்கு ஏதாவது ஒரு சிக்கல் முடிச்சை டெல்லி லாபி போடுமோ என்பதுதான். குறிப்பாக திருப்பூர் நபரின் விவகாரம் ஓவராய் அவரை ஆட்டுவிக்கிறதாம். கொடுமை!