பிரதமர் மோடி தனது 69 வது பிறந்தாள் கொண்டாடி வரும் அதே வேளையில் இன்று பெரியாரி 141வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது சமூக வலைதளங்களில் இருவரில் ஹேஸ்டாக் ட்ரெண்டாக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

திராவிடர் இனத்தின் அடையாளமாக போற்றப்படுபவர் தந்தை பெரியார். திகவுக்கு எதிரான கட்சியாக பார்க்கப்படுகிறது பாஜக. நடாளுமன்றத்தில் மற்ற எம்.பிக்கள் பதவியேற்று கொள்ளும்போது பாரத மாதாகி ஜே எனவும் வந்தே மாதரம் எனவும் கோஷமிட்டு பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் வாழ்க பெரியார் என முழங்கியபடி பதவியேற்றுக் கொண்டனர்.

 

பாஜகவினர் கடவுள் கொள்கையை பின்பற்றுபவர்கள். கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்றுபவர்கள் திமுகவினர். ஆகையால் எதிரும் புதிருமாக இயங்கி வருகின்றனர்.  இந்நிலையில் மோடி - பெரியார் ஆகிய இருவரது பிறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதனை கொண்டாடுவதிலும், பாராட்டுவதிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

ட்விட்டர் பக்கத்தில் #HBDPERIYAR141 ஹேஸ்டாக் முதலிடத்திலும், #HappyBdayPMModi ஹேஸ்டாக் இரண்டாம் இடத்திலும், #FatherOfTamilNation என்கிற பெரியாரின் ஹேஸ்டாக் மூன்றாமிடத்திலும் #happybirthdaynarendramodi நான்காமிடத்திலும் உள்ளது. மோடி- பெரியாருக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் மோடி முதலிடத்தில் இருந்தாலும் சென்னை அளவில் பெரியார் ஹேஸ்டாக் முதலிடத்தில் இருக்கிறது. இதன் மூலம் இனமானத்தை வெளிக்காட்டி தன்மானத்தை நிரூப்பித்து விட்டார்கள் தமிழர்கள் என திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.