எம்.ஜி.ஆரின் நினைவு தினத்துக்கு ‘’இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டாக்டர் எம்.ஜி.யார் நினைவு தினமான இன்று அவரது ஈகை குணத்தை போற்றி பரப்புவோம்’’ என தமிழக பாஜக வாழ்த்து தெரிவித்திருந்தது.  

அதேவேளை பெரியாரின் நினைவு தினம் குறித்த தமிழக பாஜக, ‘’மணியம்மையின் தந்தை ஈ.வே.ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்’’எனப் பதிவிட்டு இருந்தனர்.  இந்தப்பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக பாஜக இந்தப்பதிவை நீக்க வேண்டும் என ஆவேசமடைந்தனர். கடும் எதிர்ப்பால் அந்த அவதூறு ட்விட்டை தமிழக பாஜக அதிரடியாக நீக்கி உள்ளனர்.