நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் போயஸ் தோட்டத்தில் போராடி வருகிறார்கள். 

நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் அரசியல் கட்சி துவங்குவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கிடையே ரஜினியின் ரத்த அழுத்த ஏற்ற இறக்கத்தின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  முழு ஓய்வு தேவை என்னும்  மருத்துவர்களின் நிபந்தனையுடன் கடந்த 27 ஆம் தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

பின்னர் சென்னை திரும்பிய தனது உடல்நிலை காரணமாக  அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி இன்று அறிவித்தார். ஆனால் அவரது ரசிகர்கள் ரஜினியை விட்டபாடில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என  அவரது போயஸ்கார்டன் தோட்டத்து வீட்டின்  முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.