இரண்டு சாமிகளின் சண்டையால் புதுவையின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

இரண்டு சாமிகளின் சண்டையால் புதுவையின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

புதுச்சேரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தமிழ்மாறன், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் முருகசாமி ஆகியோரை ஆதரித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- தேசிய கட்சிகள் மேலுள்ள பற்றினால் புதுச்சேரி மாநிலம் கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் சீரழிந்து வருகிறது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். சாமிகளை கும்பிட்டு அதனால் நாம் பலன்பெறுவது தான் வழக்கம். ஆனால் இங்கே இரண்டு சாமிகள் இருந்துகொண்டு போடுகின்ற சண்டையால் மக்களின் வாழ்வாதரம் முற்றியலுமாக முடங்கியுள்ளது. 

தற்போது புதுச்சேரி முதல்வராக இருக்கும் நாராயணசாமி, மன்மோகன் சிங் அரசில் மத்திய அமைச்சராக இருந்த போது இங்கே ரங்கசாமி முதல்வராக இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டையால் புதுவையின் நலன்கள் பாதிக்கப்பட்டன. மத்திய அமைச்சராக இருந்த நாராணயணசாமி நினைத்திருந்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றிருக்க முடியும் என்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியோ மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு, இங்கே வரும் நலத்திட்டங்களை துணைநிலை ஆளுநர் மூலம் தடுத்து வருகிறார். இதனால் புதுச்சேரியில் காமெடியான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சாமிகளை நம்பி வீணாகாமல் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கேட்டுக்கொண்டார்.