Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் புதிய வியூகம்... பீதியில் எடப்பாடி..!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். பல நாட்களாக சொல்லிக்கொண்டு இருந்த அந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார். 

TTVdinakaran master plan
Author
Tamil Nadu, First Published May 10, 2019, 5:54 PM IST


தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். பல நாட்களாக சொல்லிக்கொண்டு இருந்த அந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே 23-ம் தேதி எடப்பாடி வீட்டுக்கு அனுப்பப்படும் என மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார். TTVdinakaran master plan

தமிழக சட்டப்பேரவையில் 22 இடங்கள் காலியாக உள்ளது. அதிமுகவிடம் 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். திமுகவிடம் 96 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ. டிடிவி. தினகரன் இருக்கிறார். இது இல்லாமல் இரட்டை இலையில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ், தனியரசு ஆகியோர் இருக்கிறார். அதேபோல் அதிமுகவின் அதிருப்தியில் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் உள்ளனர். இதனால் அதிமுக பெரும்பான்மை பெற குறைந்தது 7-8 இடங்கள் தேவைப்படுகிறது. TTVdinakaran master plan

இதனால் தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக கூறி 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு 4 அல்லது 5 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து எடப்பாடி திட்டமிட்டிருந்தார். ஆனால் எடப்பாடிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதேபோல் சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்கும் வரை சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது நீதிமன்றம் கூறியது.

 TTVdinakaran master plan

இதனிடையே திமுக சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்போம் என தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். திமுகவிற்கு அமமுக உதவ போவதாகவும் அறிவித்து இருக்கிறது. அதாவது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அமமுக திமுகவிற்கு ஆதரவு அளிக்கும். இதனால் சபாநாயகர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக அரசு கவிழ கூட வாய்ப்புள்ளது. TTVdinakaran master plan

இந்நிலையில் தினகரன் பல நாட்களாக சொல்லிக்கொண்டு இருந்த அந்த ஸ்லீப்பர் செல்கள், மூலம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார். இவர்கள் சபாநாயகற்கு எதிராக வாக்களிப்பார்கள். இல்லையென்றால் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மொத்தமாக ஆட்சியை கவிழ்ப்பார்கள். மே 23-ம் தேதிக்கு பிறகு அதிமுக ஆட்சியில் தொடருமா? கவிழுமா? அல்லது திமுக ஆட்சியமைக்குமா பொருந்திருந்திருதான் பார்க்க வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios