Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் ஆட்டத்தை தொடங்கும் டிடிவி. தினகரன்... அலறியடிக்கும் அமமுக நிர்வாகிகள்..!

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார். ஆகையால், திருச்சியில் தனது சாட்டையை எடுக்க உள்ளார்.

TTVDinakaran action
Author
Tamil Nadu, First Published Jun 21, 2019, 6:41 PM IST

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார். ஆகையால், திருச்சியில் தனது சாட்டையை எடுக்க உள்ளார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து தாய் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதனிடையே, தோல்விக்கான காரணங்கள் பற்றி கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 1-ம் தேதி ஆய்வுக் கூட்டத்தை டிடிவி.தினகரன் நடத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து மாவட்ட ரீதியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அமமுகவினர் எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் உடனடியாக ஏதும் வரவில்லை. TTVDinakaran action

அமமுக நிர்வாகிகள் ஆங்காங்கே தமிழகம் முழுவதும் கூண்டோடு அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து வரும் நிலையில், வரும் 22-ம் தேதி திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மாநகர் என மூன்று மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். திருச்சி வயலூர் மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் அமமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் வரை ஒவ்வொரு நிர்வாகியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அமமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 TTVDinakaran action

இந்நிலையில் தான் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் தினகரன். தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் இருந்து ஆய்வைத் தொடங்குகிறார். வெறும் மாவட்ட நிர்வாகிகளை மட்டும் சந்திக்காமல் கிளை கழக நிர்வாகிகள் வரைக்கும் சந்தித்து கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளின் உணர்வுகளை அறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்க டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார். சில மாவட்டச் செயலாளர்கள் இப்போதே களையெடுப்புப் பட்டியலில் இருக்கின்றனர். ஆய்வுக் கூட்டங்கள் முடிந்த பின்னர் நிர்வாகிகளை நீக்கம் செய்யவும் முடிவு செய்திருக்கிறார் தினகரன். அவர்களில் சிலர் இப்போதே அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு தாவி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios