Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் கடம்பூர் ராஜீ டி.டி.வி அணியின் ஸ்லீப்பர் செல் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே காலியாக உள்ள 2 எம்.எல்.ஏக்கள் தொகுதியினை சேர்ந்து 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக இதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

ttv team is sleeper cell admk ex mla attack speecj
Author
Chennai, First Published Nov 4, 2018, 6:33 PM IST

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே காலியாக உள்ள 2 எம்.எல்.ஏக்கள் தொகுதியினை சேர்ந்து 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக இதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இதையொட்டி அதிமுகவில் சீட் பெறுவதில் போட்டோ பேட்டி ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஆங்கங்ககே உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ttv team is sleeper cell admk ex mla attack speecj

அந்த மோதல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியிலும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ தலைமையில் இ.பி.எஸ். அணியினரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ஓபிஎஸ் தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருவதாக கட்சியினர். இவர்களிடையே மோதல் காரணமாக சமீபத்தில் எம்.எல்.ஏ. சண்முகநாதன், அமைச்சர் மீது சில குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.

இதைதொடர்ந்து, அதிமுக சார்பில் இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் விளாத்திகுளம் தொகுதியில் சீட் பெறுவதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயனும், இ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பனும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ttv team is sleeper cell admk ex mla attack speecj

இதற்கிடையில், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மணல் கொள்ளையர்கள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கிடையாது என்று கடந்த 2 நாட்ககளுக்கு முன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இது ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

விளாத்திகுளத்தில் அதிமுக 47ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ttv team is sleeper cell admk ex mla attack speecj

அதற்கு போட்டியாக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது தேர்தல் கூட்டம் கிடையாது,ஆண்டுதோறும், கட்சி நிர்வாகிகளுக்கான கூட்டம். இந்த கூட்டத்திற்கு முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகும், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மறைமுகமாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், தேர்தலில் யாருக்கு போட்டியிட வேண்டும் என்பது குறித்து கட்சி தலைமையும், முதல்வர், துணை முதல்வரும் தான் முடிவு செய்ய வேண்டும், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ முடிவு செய்ய முடியாது.ttv team is sleeper cell admk ex mla attack speecj

எனது குடும்பத்தினர் மணல், ஜல்லி வியாபாரம் பார்த்து வந்தனர், அது ஒன்று குற்றம் கிடையாது, தான் எம்.எல்.ஏவான பின்பு அதனையும் விட்டு விட்டனர், ஆனால் ஆசிரியர் பணிக்கு படித்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ என்ன தொழில் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்,நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெறவைத்தேன்.

ஆனால் அமைச்சர் கடம்பூர்.ராஜீவினால் கட்சினர் யாரும் வெற்றி பெற வைக்க முடியாவில்லை, அமைச்சர் கடம்பூர்.ராஜீவுக்கு கிடைக்கு வாக்கு ஒரே ஒரு வாக்குதான், அது அவர் மட்டும் தான்;.அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ தான் டி.டிவி. அணியில் ஸ்லீப்பர் செல்.

ttv team is sleeper cell admk ex mla attack speecj

காரணம், சசிகலா குடும்பத்தின் வழியாக சீட் வாங்கி தேர்தலில் நின்றவர், அதிமுகவில் இருந்து டி.டி.வி அணிக்கு அனுப்புவது அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தான். அவர் தொகுதி பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டால் அதிமுக டெபாசீட் கிடைக்காது, இதே நிலைமை நீடித்தால் தமிழகம் முழுவதும் 32 எம்.எல்.ஏக்கள் தான் இருப்பவர்கள், இவரைப்பற்றி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியும், அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துள்ளனர் என்றார்.

ஒரே நாளில் இருதரப்பு கூட்டம் நடத்துவதால் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios