நேற்று முன் அதிமுக வட்டாரத்தில் மிக முக்கியமான நாள். தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது தினகரன் தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்த நாள் குறித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மட்டும்தான் தினகரனோடு இருக்கிறார்கள் என அதிமுக அமைச்சர்கள் அளப்பரையை கூட்டிவந்தாலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பண்கேர்க்காமல் கட் அடித்துவிட்டு லட்சக்கணக்கானோரை கூட்டி வந்து மாஸ் காட்டி விட்டார் இந்த லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்.

இது முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்களுக்கு மட்டுமல்லாமல் மன்னார்குடி குடும்ப எதிரிகளையும் சேர்த்து அலறவிட்டுள்ளார். இப்படியான ஒரு முடிவை தினகரன் எடுப்பார் என எடப்பாடி தரப்பில் எதிர்பார்க்கவே இல்லை. முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

‘இவ்வளவு நாளா அதிமுகவை மீட்போம்னு வாய் கிழிய பேசிட்டு இருந்தாரு... இனிமேல் முடியாதுன்னுதானே கட்சி ஆரம்பிச்சிருக்காரு. தனிக்கட்சி ஆரம்பிச்சிட்டா அதுக்கு வரவேற்பு இருக்குமா? இங்கே இருக்கும் எல்லோரும் அங்கே தாவிடுவாங்களா?’ என்று எடப்பாடி கேட்டாராம். அதுமட்டுமல்ல, தினகரனுக்கு கூடிய கூட்டம் தானா சேர்ந்த கூட்டமா? இல்ல துட்டுக்கு கூட்டிட்டு வந்த கூட்டமா என சந்தேகமாக் கேட்டிருக்கிறார். 

அதற்கு பன்னீர், ‘நான் ஆரம்பத்துல இருந்தே அவங்களைப் பார்த்து நாம பயப்பட தேவை இல்லை என்றுதான் சொல்லிட்டு இருக்கேன். நீங்கதான் தேவையில்லாமல் அவரைப் பார்த்து பயந்துட்டு இருக்கீங்க. அவரு ஆரம்பிச்ச கட்சிங்குறது இனி தமிழ்நாட்டுல இருக்கிற கட்சிகளில் பத்தோடு ஒன்ணா இருக்கப் போகுது. நீங்க சொல்ற மாதிரி யாரும் இங்கே இருந்து போற மாதிரி இல்ல.

இவ்வளவு நாளா எப்படியாவது நாம சேர்த்துக்குவோம்னு தான் கூப்பாடு போட்டாரு. நாம யாருமே அவரை கண்டுக்கல. பெயரு இல்லாமல் எத்தனை நாளைக்கு ஊரை சுத்திட்டு இருக்க முடியும். அதுக்காக ஒரு பேரு வெச்சிருக்காரு.. இதெல்லாம் அடுத்த எலெக்‌ஷன் வரைக்கும் தாக்குப்பிடிக்குமான்னு பார்க்கலாம்!’ என எடபபாடியாரை சமாதானம் செய்தாராம்.

அமைச்சர் ஜெயகுமாரும் பேசியிருக்கிறார். ‘இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு... தினகரன் அறிவிச்ச கட்சிக்கு ஒரு கொடி வெளியிட்டு இருக்காரு இல்ல.. கருப்பு வெள்ளை சிவப்பு நடுவுல அம்மா படம்னு... அந்தக் கொடி கூட அவங்களோடது இல்ல, ஏற்கெனவே இந்த தீபா புருஷன் மாதவன் தீபாகூட சந்த போட்டுக் கொண்டு போய் கோபத்துல அரம்பிசாருல்ல அதாங்க எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க ன்னு...

அந்தக் கட்சியோட கொடிதாங்க அது. மாதவன்கிட்ட நானும் பேசினேன். அவரு செம்ம கடுப்புல இருக்காரு. மாதவனை வெச்சு தினகரன் மேல வழக்குப் போட சொல்லணும். மாதவனை நாம பெருசா நினைக்க தேவை இல்லைன்னாலும், தினகரனுக்கு மாதவன் போட்டி என புரளிய கிளப்பி விட்டாலே போதும் அதுவே,  அவரை அசிங்கப்படுத்துது மாதிரி இருக்கும். மாதவன்கிட்ட பேசிப் பார்ப்போம்...’ என  சொல்ல...

‘இது என்ன புதுசா இருக்கே... ஒரு கொடியை கூட சுயமா யோசிக்கத் தெரியலையா? மாதவன் பிரச்னை பண்றது தெரிஞ்சா அவரையும் தினகரன் வளைக்கப் பார்ப்பாரு... நீங்க உடனே அவரைக் கூப்பிட்டு பேசி அடுத்தகட்டமாக என்ன செய்யணும்னு மாதவனுக்கு ஐடியா சொல்லுங்க. ‘ என எடப்பாடியார் சொன்னாராம்.

உடனே மாதவனையும் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சரிடம், ‘கொடி என்னோடது தான், அதுக்கு காப்பி ரைட்ஸ் என்னிடம் இருக்கு. நான் கேஸ் போடப் போறேன். அதுக்கு உங்க உதவி வேண்டாம். நான் பார்த்துக்குறேன்...’ என சென்னாராம் மாது குட்டி. எப்படியோ ஒரு பைசா செலவு இல்லாம தினகரன இப்படி கோர்த்துவிட்ட சந்தோசத்தில் நிம்மதியாக இருக்கிறதாம் ஆளும் தரப்பு.