பெட்ரோல் குண்டு வீச்சில் புகைப்பட கலைஞர் ஒருவரும், தினகரனின் கார் ஓட்டுனரும் பலத்த காயம் அடைந்து இருவரையும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தினகரனின் கார் டிரைவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள அம்மா முனேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று 1 மணியலளவில்  இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தீடீர் என வண்டியில் இருந்த படியே, டிடிவி தினகரன் கார் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். 

இந்த சம்பவத்தில், புகைப்பட கலைஞர் ஒருவரும், கார் ஓட்டுனரும் பலத்த காயம் அடைந்த அவர்களை மருத்துவமைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், 25% சதவிகித காயங்களுடன் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தினகரனின் கார் டிரைவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.