யாரும் சொல்லாத விஷயத்தை பாயிண்ட் அவுட் செய்த தினகரன்...! வாழ்த்து சொல்வதிலும் தனி வழி..! 

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக புவி வட்டப்பாதையை சென்றடைந்தது.

இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, உருவாக்கி வெற்றிகரமாக விண்னில் ஏவப்பட்டது. 

இது குறித்து டிடிடிவி தினகரன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்..
   
அதில், 

"சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித் துறையின் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிற ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்"

அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா அவர்கள் திட்ட இயக்குனராக இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 

 

அவரோடு சேர்ந்து சந்திராயன் -2 குழுவில் பணியாற்றிய 30 சதவிகிதம் பெண்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் இதன் மூலம் வரலாற்றில் தங்களுடைய பெயரைப் பொறித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்" என பதிவிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையாவிற்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம் சிறப்பு வாழ்த்தினை தெரிவித்து உள்ளார் தினகரன்.