Asianet News TamilAsianet News Tamil

ஆட்சி கலைப்பு ஏற்படுமா? 18+1 = 19, 99 + 19 = 118 மொத்த அரசியலையும் தீர்மானிக்கும் தினகரனின் முடிவு!

TTV Dinakaran will be deserved Tamilandu Govt
TTV Dinakaran will be deserved Tamilandu Govt
Author
First Published Dec 28, 2017, 4:27 PM IST


வெற்றிகரமாக நடந்து முடிந்த இடைதேர்தல், வரும் ஜனவரி 8 ஆம் தேதி கூடும் வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஆளும் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போய், இப்போது ஆளும்கட்சிக்கு எதிராக களத்தில் குதித்து வெற்றிபெற்றிருக்கும் முதல்முறையாக சட்டசபைக்கு தனிஒருவனாக செல்லவிருப்பதால், எடப்பாடி – பன்னீர் கூடாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்வதற்கு முதல்நாள் கடைசியாக தினகரனை சந்தித்த பன்னீர்செல்வம், இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாவதற்கு முதல் நாள் தினகரனை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி இப்படி மூவரும் வெகு நாட்களுக்குப்பின் வரும்  8 ஆம் தேதி சட்டசபையில் நேருக்கு நேராக சந்திக்கப் போகிறார்கள். என்ன நடக்கும்?

TTV Dinakaran will be deserved Tamilandu Govt

ஆட்சி கலைப்பு ஏற்படுமா ? என்ற கேள்வி பலரிடமும் எழுவதை பார்க்க முடிகிறது. ஆட்சி கலைப்பு ஏற்படுமா ? என்று கேட்டால், அது தினகரன் கைகளில் தான் உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் தினகரனுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ தீர்ப்பு வந்தாலும், ஓ.பி.எஸ் தரப்பின் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கில் 12 பேருக்கும் எதிராகவே தீர்ப்பு வரும்.

பன்னீர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தனது கட்சியின் கொறடா உத்தரவை எதிர்த்து சட்டப்பேரவையில் வாக்களித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் கண்காணிக்கிறது. ஏற்கனவே 111 தான் உள்ளது. தற்போது திமுக கூட்டணி 98 (தலைவர் கருணாநிதியை சேர்த்து) என்ற எண்ணிக்கையில் பலமாக உள்ளனர்.

TTV Dinakaran will be deserved Tamilandu Govt

பன்னீர் அணியை சேர்ந்த 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், தினகரன் வழக்கிலும் தீர்ப்பு பாதகமாகவே வந்தால், 98 - 99 என்கிற நிலையே இருக்கும். அப்போது புதிதாக வந்திருக்கும் சுயேட்சை தினகரன் (1) ஆதரவு இரு தரப்புக்கும் தேவைப்படும். திமுக பெரும்பான்மையை நிரூபிக்க மனு அளித்தால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தினகரனை நாடும். அப்போது தினகரனின் முடிவு இறுதியான முடிவாக இருக்கும். ஒருவேளை தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், 18+1 = 19 என்கிற நிலை உருவாகும். அப்போது தினகரன் ஆட்சியை கலைக்க முடிவெடுத்தால், 98 +19 = 117 என்கிற எண்ணிக்கையில் அரசுக்கு எதிராக வாக்குகள் விழும்.

ஒருவேளை தினகரனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்று, முன்வந்தால் 99 + 19 = 118 என்ற எண்ணிக்கையில் அது மாற்றம் பெறும். ஆக, தினகரனின் முடிவு தான் மொத்த அரசியலையும் தீர்மானிக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios