அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததையடுத்து, டி.டி.வி.தினகரன் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆதரவு எம்எல்ஏக்கள் 18 அபருடம் ஜெ.சமாதி சென்று அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்பு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைந்தன.

இதையடுத்து ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் டி,டி,வி,தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன், ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்கிறார். அங்கு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு, டி.டி.வி.தினகரன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரனின் இந்த அறிவிப்புகள், அதிமுக வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது