சிறையில் உள்ள சசிகலாவை தற்போதுதான் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் என்றும் , அவரது ஆலோசனைப்படி நிச்சயம் ஆபரேசன்  நடக்கும் எனவும்  டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை அதிமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தினகரன்,  ஜெயலலிதாவின்  போயஸ் இல்லத்தை  அவசரகதியில் நினைவிடமாக  மாற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

போயஸ் தோட்ட இல்லம் குறித்து, ஜெயலலிதா என்னமாதிரி உயில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நன்கு அறிந்த பின் நினைவிடமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று  டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தற்போது  சிறையில் உள்ள சசிகலாவை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், அவரகு ஆலோசனைப்படி நிச்சயம் ஆபரேசன்  நடக்கும் என தினகரன் கூறியுள்ளார்.