கட்சியை யாரும் கைப்பற்ற முடியாது என்றும் கட்சி இருந்தால்தான் ஆட்சி இருக்கும் என்றும் ஆட்சியில் இருப்பவர்கள் கையில் கண்ணாடி பாத்திரத்தை வைத்திருப்பது போன்றது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கட்சியை யாரும் கைப்பற்ற முடியாது.கட்சியைக் காப்பாற்ற வேண்டும். கட்சி இருந்தால்தான் ஆட்சி இருக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் கையில் கண்ணாடி பாத்திரத்தை வைத்திருப்பது போல என்றார்.

கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்வோர் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். 

யார் திருடன் என்பது அதிமுக தொண்டர்களுக்கு நன்றாக தெரியும். ஏப்ரல் 10 ஆம் தேதி வரை என்னுடன் இருந்த அமைச்சர்கள், பின்னர் சசிகலாவின் பேனர்களை அகற்றியது ஏன்?

கடந்த 10 ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். சசிகலாவின் காலில் விழுந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அந்த போட்டோ கூட என்னிடம்வை இருக்கிறது அதை வெளியே விட்டால் அவருக்கு நல்லதல்ல.

இவ்வாறு கூறினார்.