அமமுகவில் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்துவந்தார் தங்கதமிழ்ச்செல்வன் தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததிலிருந்து டிடிவி தினகரனுக்கும் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. தங்க தமிழ்ச்செல்வன் கட்சி மாறப்போவதாக கடந்த ஒரு வாரகாலமகாவே ஊகங்கள் வெளியாகிவந்தன. 

ஆனால், அதையெல்லாம் தங்கதமிழ்ச்செல்வன் மறுத்துவந்தார். இந்நிலையில் அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை திட்டி பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


 
இதனையடுத்து தேனி மாவட்ட அமமுகவினருடன் ஆலோசனை நடத்தினார் டிடிவி.தினகரன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அவரிடம் எதுவும் பேசாதீங்க.. அப்படி பேசினால், உங்கள் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்துவிடுவேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதைக்கு அவருடைய இடத்துக்கு வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்துவிட்டோம்” என்று தெரிவித்தார். 

இது குறித்து  இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ் செல்வன், தினகரன் தீவிரவாத அமைப்புக்கு தலைவராக இருக்க வேண்டியவர் என்றும், அவர் ஒரு கட்சியில் தலைவராக இருக்க லாயக்கற்றவர் என்றும் தங்கத் தமிழ்செல்வன் அதிரடியாக தெரிவித்தார்.

நான் எப்போதுமே உண்மையைப் பேசுவேன். அதனால் மக்கள் அதை ரசிக்கிறார்கள். ஆனால் தினகரனுக்கு அது பிடிக்கவில்லை என்றார். என்னை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இயக்குவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் நான் அவர்களிடம் பேசக்கூட இல்லை. நான் வேறு எத்க் கட்சியிலும் இணைவதாக இல்லை. எனது அடுத்த கட்ட நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான். ஆனால் டி.டி.வி.தினகரன் வாட்ஸ்அப் குரூப்பில் என்னைப்பற்றி தவறாக தகவல்களை பரப்பி வருகிறார்.

தற்போது 18 எம்எல்ஏக்கள் பதவி இருந்து மிகுந்த வேதனையுடன் உள்ளனர். இதுற்கு முழுக்காரணம் டி.டி.வி.தினகரன்தான். பொதுவாக தொண்டர்கள் தலைமையை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தலைமைக்கு வேண்டும் என்றார்.