Asianet News TamilAsianet News Tamil

டிடிவி. தினகரன் குரலா இது... 5 மாதங்களுக்கு பிறகே சோதனை..!

அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் குரல் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
 

TTV Dinakaran voice sample test case
Author
Delhi, First Published Apr 30, 2019, 6:00 PM IST

அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் குரல் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் இரண்டாக பிளவு ஏற்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.TTV Dinakaran voice sample test case

அதன்பின்னர் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைத்தனர். இதற்காக டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார். TTV Dinakaran voice sample test case

இந்த ஆடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கூறிய டிடிவி தினகரன், தன் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனுவில் தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குரல் பரிசோதனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி டிடிவி தினகரன் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios