ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி, அம்மா, தாயே, அக்கா, தங்கச்சி நான் பேசுறதைக் கேளுங்கம்மா, என  பன்னீர்செல்வம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் என தினகரன் கூறியுள்ளார்.

காலியாக உள்ள 4 தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துவருகிறது. நான்கு தொகுதிகளிலும் மையமிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்துப் பேசிய தினகரன்,  

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது,  அவரைப்  பார்க்க வராத மோடியுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளார்கள் எடப்பாடியும் பன்னீரும்.  அம்மாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, விசாரணைக் கமிசன் அமைக்கக் சொன்னது ஒ.பி.எஸ்.  ஆனால், இதுவரை ஒருமுறை கூட அந்த விசாரணை ஆணையத்தில் அவர் ஆஜராகவில்லை ஏன்? சட்டப்பேரவையில் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த  எம்.எல்.ஏ சுந்தர்ராஜனுக்குத் தகுதிநீக்கம் பண்ணிட்டாங்க.  ஆனா பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸுக்கு துணை முதல்வர் பதவியா?  

அதிமுக பிரசாரக் கூட்டங்களில் ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி, அம்மா, தாயே, அக்கா, தங்கச்சி நான் பேசுறதைக் கேளுங்கம்மா  என  பன்னீர்செல்வம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.  தேர்தல் முடிவுக்குப் பிறகும் அவர் இப்படித்தான் பேசப் போகிறார்.