MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அதிமுக கூட்டணியில் மீண்டும் தேமுதிக.?! சிவராத்திரி பூஜையில் முடிந்தது பேச்சுவார்த்தை.! அண்ணியாருக்கு துணை முதலமைச்சர் பதவியாம்!

அதிமுக கூட்டணியில் மீண்டும் தேமுதிக.?! சிவராத்திரி பூஜையில் முடிந்தது பேச்சுவார்த்தை.! அண்ணியாருக்கு துணை முதலமைச்சர் பதவியாம்!

கோவையில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்தும், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணியும் சந்தித்தது, இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 16 2026, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசியல் ஆட்டம் ஆரம்பம்
Image Credit : Facebook

அரசியல் ஆட்டம் ஆரம்பம்

தமிழக அரசியல் களம் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழா ஒரு முக்கிய அரசியல் திருப்பத்திற்கான மையப்புள்ளியாக மாறியுள்ளது. ஈஷா மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அவருடன் அதிமுகவின் முக்கியப் புள்ளியான எஸ்.பி. வேலுமணி இணைந்து சத்குருவைச் சந்தித்தது, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
முக்கிய கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையும்
Image Credit : Google

முக்கிய கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையும்

கடந்த சில வாரங்களாகவே அதிமுக - தேமுதிக இடையே திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்தச் சந்திப்பு அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. தேமுதிக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் வழங்கப்பட்டது போல, தங்களுக்குப் போதுமான எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனத் தேமுதிக வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால், அதற்கு ஈடாக வருங்காலக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற அதிரடி நிபந்தனை விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.

Related Articles

Related image1
‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!
Related image2
ஓவர் பேரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரேமலதா...! கதவை மூடிய திமுக..! சிக்கலில் தேமுதிக..!
34
மீண்டும் களத்தில் சீறி பாய காத்திருக்கம் தேமுதிக
Image Credit : our own

மீண்டும் களத்தில் சீறி பாய காத்திருக்கம் தேமுதிக

முடிவை நோக்கிய நகர்வு சத்குருவுடனான சந்திப்பின் போது, ஆன்மீக விஷயங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அதிமுக தலைமை தேமுதிகவின் கோரிக்கைகளை மேலிடத்திற்கு கொண்டு சென்று சுமுகமான முடிவை எட்ட முனைப்பு காட்டி வருகிறது.

44
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Image Credit : our own

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், தனது பலத்தை நிரூபிக்க தேமுதிக இத்தகைய பெரிய கோரிக்கைகளை முன்வைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அரசியல்
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..
Recommended image2
விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Recommended image3
Sasikala In Admk: மீண்டும் ஆளுமையை நிரூபிக்கும் சசிகலா.! சின்னம்மா பக்கம் சாயும் அதிமுக.! வனவாசம் முடிந்தது என கொக்கரிக்கும் தொண்டர்கள்.!
Related Stories
Recommended image1
‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!
Recommended image2
ஓவர் பேரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரேமலதா...! கதவை மூடிய திமுக..! சிக்கலில் தேமுதிக..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved