ஆளும் அ.தி.மு.க. அணியிலிருந்து சமீபத்தில் விழுந்த முக்கிய விக்கெட் மாஜி அமைச்சர் கோயமுத்தூர் தாமோதரன். ஜெயலலிதாவின் கவர்மெண்டில் விவசாய துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்த போது, இருதய ஆபரேஷனுக்குள்ளாகி சில மாதங்கள் ஆஸ்பிடலில் இருந்தார். அந்த நிலையிலும் அவரை அமைச்சரவையிலேயே ஜெ., தொடர விட்டிருக்க காரனம் சசிகலாவின் சிபாரிசு. 

ஆளும் அ.தி.மு.க. அணியிலிருந்து சமீபத்தில் விழுந்த முக்கிய விக்கெட் மாஜி அமைச்சர் கோயமுத்தூர் தாமோதரன். ஜெயலலிதாவின் கவர்மெண்டில் விவசாய துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்த போது, இருதய ஆபரேஷனுக்குள்ளாகி சில மாதங்கள் ஆஸ்பிடலில் இருந்தார். அந்த நிலையிலும் அவரை அமைச்சரவையிலேயே ஜெ., தொடர விட்டிருக்க காரனம் சசிகலாவின் சிபாரிசு. 

ஆனால் ஜெ., மரணத்துக்கு பின் பன்னீர் தனி அணி துவங்கியபோது அங்கே போய் நின்று கொண்டு சசிகலாவை தாறுமாறாக விளாசி தள்ளினார். ஆனால் அணிகள் இணைந்தபிறகு தாமோதரனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் பன்னீர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாமோதரன், கடந்த வாரம் திருச்சியில் தினகரனை சந்தித்து அந்த அணியில் இணைந்துவிட்டார். 

இணைப்புக்குப் பின் பேட்டி தட்டியிருக்கும் அவர், ” பன்னீர் அணிக்கு ஆளும் அ.தி.மு.க.வுல எந்த மரியாதையுமில்லை. போஸ்டர்ல பன்னீர் அணி நிர்வாகிகள் பெயரை போடக்கூடாதுங்கிறதுல துவங்கி பல புறக்கணிப்புகள். இத்தனையையும் பண்றது அந்தந்த மாவட்ட அமைச்சர்கள்தான். இதை பன்னீர்ட்ட சொன்னா, ‘பொறுமையா இருங்க, பொறுத்திருங்க’ன்னு சொல்லியே காலத்தை ஓட்டிட்டு இருக்கிறார். 

துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர்ன்னு நல்ல பதவிகள்ள செட்டிலாகிட்டார். ஆனால் அவரை நம்பிப் போன எங்களோட நிலையை யோசிக்கவேயில்லை. தொடர் அவமானம் தாங்க முடியாமல்தான் நான் வெளியேறிட்டேன். 

எடப்பாடியாரே கொஞ்சம் மனசு வெச்சு, ‘பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகளை அரவணைச்சுப் போங்க!’ன்னு சொன்னாலும் கூட அமைச்சர்கள் கேட்கிறதில்லை. ’அந்த கோஷ்டியை நீங்க ஆதரிச்சா, அணி மாறி ஆட்சியை கலைச்சிடுவோம்.’ன்னு சொல்லி முதல்வரை மிரட்டுறாங்க. தங்களோட எல்லா வேலைகளையுமே ‘ஆட்சி கலைப்பு’ங்கிற வார்த்தையை சொல்லித்தான் மிரட்டி மிரட்டி சாதிச்சுட்டு இருக்கிறாங்க. சிம்பிளா சொல்றதுன்னா, ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சியாக பன்னீர் அணி அங்கே கெடந்து தவிக்குது.

இப்படியெல்லாம் கேவலங்கள் வரும், அதனால் ஆளும் அணியோடு இணைய வேண்டாமுன்னு பன்னீர்ட்ட எவ்வளவோ சொல்லி தடுத்தோம். தொண்டன் விருப்பம் இதுதான்! மக்களும் உங்களை இப்படி இருந்தால்தான் நம்புவாங்க!ன்னு சொன்னோம். ஆனால் அவர் எதையுமே கேட்கலை. நல்ல தலைவனுக்கு அழகு, தன்னை நம்பி வந்தவங்களை மகிழ்ச்சியா வெச்சுக்கிறதுதான். 

ஆனால் பன்னீர் அப்படி நடந்துக்கலை! அவரு சேஃபா செட்டிலாயிட்டு, எங்களை தவிக்க விட்டுட்டார். மாஜி அமைச்சர் அப்படிங்கிற முறையில, அமைச்சரவையில் நடக்கும் விஷயங்களை கவனிச்சுட்டுதான் இருக்கிறேன் சில தூதர்கள் மூலமாக. அங்கே நடக்கிற பஞ்சாயத்துக்களை அப்படியே அப்பப்ப போட்டு உடைப்பேன்.” என்று போட்டுத் தாக்கியுள்ளார் தாமோதரன். 

ஆளும் அணிக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறதாம் இந்த விவகாரம். இந்நிலையில், தன் கையிலிருக்கும் வெற்றிவேல், தாமோதரன் உள்ளிட்டோரை வைத்து, அவர்களின் செல்வாக்குகளின் மூலமாக எடப்பாடியார்- பன்னீர் என இரு அணிகளுக்குள்ளும் நடக்கும் பஞ்சாயத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து, வாலண்டியராக மக்கள் மத்தியில் போட்டுடைக்க வேண்டுமென்று தூண்டி விட்டிருக்கிறாராம் டி.டி.வி.