அதிமுக துணை பொது செயலாளராக பொறுப்பேற்று கொண்ட டி.டி.வி.தினகரன், அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின், தோல்வி அடைவார் என செய்தியாளர்களிடம் கூறினார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதனை, ஏற்க மறுத்த சபாநாயகரை, தடுத்து நிறுத்தி திமுகவினர் தகராறு செய்தனர். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், இதை பெரிதுப்படுத்தி உண்ணாவிரத போராட்டம் என்பது உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். இன்று ஜனாதிபதியிடம் எங்கள் இயக்கத்தை முடக்குவதற்கு, புகார் தெரிவிக்க டெல்லி சென்றுள்ளார். அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும்.
இவ்வாறு அவர் கூறினார்
