Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசியலில் மீண்டும் பதற்றம்... 3 டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்?

3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது, அரசு கொறடா பரிந்துரைத்ததின்பேரில், அவர்கள் மீதும் தகுதி நீக்கம் பாயும் என்று கூறப்படுகிறது.

TTV Dinakaran support 3 AIADMK MLAs Notice?
Author
Chennai, First Published Oct 27, 2018, 2:02 PM IST

அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. இதனை அடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி இழந்தனர். TTV Dinakaran support 3 AIADMK MLAs Notice?

இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் டிடிவி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பிரபு, விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி கலைச்செல்வன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. TTV Dinakaran support 3 AIADMK MLAs Notice?

தற்போது, 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டதால், தங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுவிடுமோ? என்று இவர்கள் 3 பேரும் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 TTV Dinakaran support 3 AIADMK MLAs Notice?

இவர்கள், ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்காதபட்சத்தில், கொறடா ராஜேந்திரன் மூலம் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளிக்கவும் கூறப்பட்டது. இந்த நிலையில், 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது, அரசு கொறடா பரிந்துரைத்ததின்பேரில், அவர்கள் மீதும் தகுதி நீக்கம் பாயும் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீதும் தகுதி நீக்கம் என்பது பாயும் என்று கூறப்படுகிறது. எப்போது சபாநாயர் நோட்டீஸ் அனுப்புவார் என்ற தகவல் இல்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios