TTV Dinakaran suggested a new party with Sasikala in jail in the property case
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுடன் புதிய கட்சி தொடங்குவது குறித்து டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார்.
பின்னர் புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் பேரவை தொடங்கலாமா என திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என டிடிவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுடன் புதிய கட்சி தொடங்குவது குறித்து டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
